தமிழ் பட்டிமன்றம்!

வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு காரணம்  வாய்ப்பா? – உழைப்பா?

ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு சுவாரசியமான தமிழ் பட்டிமன்றம் கடந்த 14.11.2015 அன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இப்பட்டிமன்றம் மாடல் பள்ளி இயக்குநர் திரு. ஜெய்ரஸ் மற்றும் தாளாளர் திருமதி.சுசித்ரா ஜெய்ரஸ் அவர்கள் முன்னிலையில் தூய இக்னேசியஸ் பள்ளியின் வணிகத் துறை முதுநிலை ஆசிரியர் திருமதி.தங்கம் கெளசல்யா அவர்கள் நடுநிலையில் சிறப்பாக நடைபெற்றது.

 

இரண்டு வலுவான அணியினரும், சிரிப்பிற்கும், சிந்தனைக்கும் எவ்வித குறையுவுமின்றி வார்த்தை ஜாலங்களுடன் அழகிய எளிய தமிழ் நடையில் தனது தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனர், இறுதியாக பல்வேறு உண்மைச்சம்பவங்களை எடுத்துக்கூறி வாழ்க்கையின் முன்றேற்றத்திற்கு காரணம் நமக்கு கிடைக்கும் வாய்ப்பே என்றும், வருகிற வாய்ப்பை தவறவிடுபவர் முன்னேற்றம் அடைவதில்லை என்று நடுவர் தீர்ப்பு வழங்கினார். சுமார் இரண்டுமணி நேரம் நடைபெற்ற இந்த பட்டிமன்றம் ஆசிரியர்களின் பேச்சுத்திறமையை வளர்த்திட ஒரு வாய்ப்பாகவே அமைந்தது எனக்கூறுவதே சாலச்சிறந்தது.

 

புகைப்படங்களைக்காண வருகை தாருங்கள் rosemaryschool.webnode.com/photoarchives/#a1-jpg3